தமிழக செய்திகள்

குரூப்-1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு நாளை தொடங்குகிறது

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.

தினத்தந்தி

சென்னை,

சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் 70 காலிப்பணியிடங்களும், உதவி வனப்பாதுகாவலர் (குரூப்-1ஏ) பதவியில் 2 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 72 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை 1 லட்சத்து 81 ஆயிரத்து 422 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி வெளியானது. தேர்வில் 1,865 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.

அவர்களுக்கான முதன்மைத் தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. நாளை தமிழ் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து குரூப்-1 பதவிகளுக்கு தாள்-2, தாள்-3, தாள்-4 தேர்வு முறையே 2, 3, 4-ந்தேதிகளிலும், குரூப்-1 ஏ பதவிகளுக்கு முறையே 8, 9, 10-ந்தேதிகளிலும் நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்காக சென்னையில் 19 மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்