தமிழக செய்திகள்

2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி

2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள பெருமாள் கோவில் மற்றும் ஓம் சக்தி கோவில் ஆகியவை அடுத்தடுத்து உள்ளறன. இந்த கோவில்களில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலை அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அம்பலூர் போலீசார் விநைது சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் 2 கோவில்களின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மரம் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்