சென்னை,
தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் நாளை மறுநாள் முதல் புறநகர் ரயில் சேவை இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் புறநகர் ரயில்சேவை இயக்கம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 7ம் தேதி முதல் புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வமான அட்டவணை ஏதும் வெளியிடவில்லை என்றும் தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.