தமிழக செய்திகள்

தே.மு.தி.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது

தே.மு.தி.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று ஆத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன் பேசினார்.

தினத்தந்தி

ஆத்தூர்:-

இருவழிச்சாலையாக உள்ள சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை கட்சியின் நகர செயலாளர் சீனிவாசன், நரசிங்கபுரம் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வரவேற்று பேசினர். மாவட்ட அவைத்தலைவர் கணேசன், கருப்பூர் பழனிசாமி, கமலா, கருப்பண்ணன், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் விஜயகாந்தின் மகனும், நடிகருமான விஜய பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைத்தால் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இலைகளும், சுட்டெரிக்கும் சூரியனும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. தே.மு.தி.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நாம் மீண்டும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், முன்னாள் எம்,.எல்.ஏ. சுபா ரவி, கேப்டன் மன்ற மாநில செயலாளர் சுல்தான் பாஷா உள்பட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்