தமிழக செய்திகள்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகசுந்தரராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும். முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் சீத்தாராமன், கண்ணன், சிவசுப்பு பாண்டியன், மாயாண்டி, நல்ல பெருமாள், டேவிட் அப்பாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி செயலாளர் விஜயராஜா நன்றி கூறினார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்