தமிழக செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர், வட்ட உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்கள் சார்பில் நேற்று திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கீழச்சிவல்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய், பெரியசாமி, கலையரசன், காளீஸ்வரி, சேதுபாமா, மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்