தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்து விட்டது. டீசல் விலையும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில இடங்களில் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றன்ர்.

இந்த நிலையில், இன்றைய (ஜூலை 04) பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் 19 காசுகளும் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 100.13 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 100.44 ரூபாய்க்கும், டீசல் 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்