தமிழக செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்? - இன்று அறிவிப்பு வெளியாகிறது

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறினார்.

சேலம்,

பெட்ரோல்-டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போன்று ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்களும் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு ஆண்டாக லாரி தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது. ஏராளமான லாரிகள் அவரவர் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் சுமார் 35 சதவீதம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசு லாரி உரிமையாளர்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் லாரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பானது, டீசல் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வராவிட்டால் நாடு முழுவதும் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தும், போராட்டத்தில் பங்கேற்பது குறித்தும் முடிவு எடுக்க இன்று (வியாழக்கிழமை) தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேள ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டு உள்ள தொழில் பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பிறகு முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்