தமிழக செய்திகள்

தேங்கி நிற்கும் மழைநீர்

அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தினத்தந்தி

அதிராம்பட்டினம்;

அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சாலையில் தேங்கும் மழைநீர்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை, மதுக்கூர், மன்னார்குடி, கும்பகோணம், செல்லும் சாலையான வண்டிப்பேட்டை சபரி அய்யப்பன் கோவில் எதிரே பல மாதங்களாக சாலை பழுதடைந்து தாழ்வாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் அதிக அளவு தேங்கி உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

சாலை தாழ்வாக இருப்பதால், மழைக்காலங்களில், மழை வெள்ளம், குளம்போல் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சாலைப்பணிகள் நடக்கவில்லை. தார் சாலை குண்டும்- குழியுமாக உள்ளதால் இந்த சாலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.இதைப்போல அதிராம்பட்டினம் பஸ் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் சாலை பழுதடைந்து பெரிய பள்ளத்துடன் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோக்கை விடுத்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்