தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.200 கோடி பயிர் கடன்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.200 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

தினத்தந்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.200 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

பயிர் கடன்

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான திறனாய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20,878 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. 30.12.22 வரை 33,330 விவசாயிகளுக்கு ரூ.205.19 கோடி பயிர்கடனும், 5661 விவசாயிகளுக்கு ரூ.81.27 கோடி கால்நடை பராமரிப்பு கடனும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க கூட்டுறவுத்துறையின் பயிர் கடன் உதவியாக இருக்கும்.

நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்ட மொத்த சாகுபடி பரப்பளவு 4.51 லட்சம் ஏக்கர். மொத்த விவசாயிகள் 1.74 லட்சம். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் ஐந்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு இதுவரை பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது. நெல் பயிருக்கு கடன் வழங்கும் காலத்தை 13.1.23 வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இந்த ஆண்டு பயிர் கடன் வழங்குவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மண்டல இணைபதிவாளர் முத்துகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், வேளாண் இணை இயக்குனர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்