தமிழக செய்திகள்

10 கிலோ ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை

10 கிலோ ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை

தினத்தந்தி

மூலனூர்

தமிழகத்தில் நடைபெறும் ஆட்டுச் சந்தைகளில் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச் சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வாங்க கோவை, பொள்ளாச்சி, உடுமலை வியாபாரிகள் வருகிறார்கள்.

சந்தையில் நேற்று ஆடுகளின் விலை சற்று குறைவாகவே இருந்தது. கடந்த வாரத்தில் 10 கிலோ ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.6ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் 6 ஆயிரம் ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

-------------------

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்