தமிழக செய்திகள்

சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது

தினத்தந்தி

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த புளியால் பகுதியில் சாலையில் ஆறாக கழிவுநீர் ஓடியது. இதனால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என கடந்த 23-ந் தேதி `தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிராலியாக தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன் இந்த பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் புளியால் தெருக்களில் ஓடிய சாக்கடை கால்வாய் சுகாதார பணியாளர்களால் தூர்வாரப்பட்டது. மக்களின் நலன்கருதி செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்