சென்னை,
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த பல வதந்திகள் பரவலாக எழுந்தன. அதனால் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 1.74 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 1.74 லட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மினி கிளினிக்கில் பணியாற்ற 2,000 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓரிரு நாட்களில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.