தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 1,74,200 பேர் பயணம்

சட்டப் பேரவைத் தோதலையொட்டி சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 1,74,200, பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊாகளுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்.1 முதல் 5 நாள்களுக்கு சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்தப் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகா பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞா அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சட்டப் பேரவைத் தோதலையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 1,74,200, பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலின் படி,

போக்குவரத்து துறையின் சார்பில், 2021- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (02.04.2021) இரவு 07.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளில் 1650 பேருந்துகளும் 170 சிறப்புப் பேருந்துகள் என ஆக கடந்த (01/04/2021 முதல் 02/04/2021) இன்று இரவு 07.00 மணி வரையில் 4,355 பேருந்துகளில் 1,74,200, பயணிகள் பயணித்துள்ளனர்.

மேலும் இதுவரையில் 32,237 பயணிகள் முன்பதிவும் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்