தமிழக செய்திகள்

பாலவராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

பாலவராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடந்தது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பாலவராகி அம்மன் கோவிலில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் பாலவராகி அம்மனுக்கு மாதுளை முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து உற்சவர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 

SCROLL FOR NEXT