தமிழக செய்திகள்

சாலை சீரமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்

திருக்கருகாவூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

மெலட்டூர்:

கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில்

பாபநாசம் அருகே திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

சாலை சீரமைக்கும் பணி

இந்த பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பள்ளம் தோண்டப்பட்டது. அத்துடன் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணி நிறுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மீண்டும் தொடங்கவில்லை.

இதனால் கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களும், அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் தொடங்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைக்க பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்