தமிழக செய்திகள்

விபத்தில் ஆசிரியரின் கால் முறிந்தது

விபத்தில் ஆசிரியரின் கால் முறிந்தது.

குன்னம்: 

குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 40). தனியார் பள்ளி ஆசிரியரான இவர் குன்னத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிரே பெரம்பலூரில் இருந்து வந்த டிப்பர் லாரி கல்பாடி செல்வதற்காக க. எறையூர் பிரிவு சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ராமச்சந்திரனின் வலது கால் முறிந்தது. இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமச்சந்திரன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு