தமிழக செய்திகள்

பலத்த மழையால் வீட்டின் சுவர்கள் இடிந்தன

பலத்த மழையால் வீட்டின் சுவர்கள் இடிந்தன.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியம் சிக்கத்தம்பூர் மாரியம்மன் கோவில் காலனி வீதியில் வசிப்பவர் சாமிக்கண்ணு வைத்தி. கூலி தொழிலாளி. இவரது தாயார் நாகம்மாள்(வயது 70). இவர்கள் ஒரே கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழையால் நேற்று காலை அந்த கூரை வீட்டின் முன்பக்கமும், பின்பக்கமும் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. அந்த வீட்டின் அருகிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் நடந்து வருவதால், மழை காரணமாக சாமிக்கண்ணுவைத்தி புதிய வீட்டிலேயே தங்கியதாக தெரிகிறது. மேலும் காலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததால் நாகம்மாள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ஜமுனாராணி உள்ளிட்டோர் சென்று சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்