மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வேன் ஒன்று நேற்று காலை மயிலாடுதுறை பகுதியில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் செல்லும் வழியில் மல்லியம் என்ற இடத்தில் சென்றபோது வேனின் அவசரகால வழி கதவு தானாக கழன்று தொங்கியது. உடனே வேனில் இருந்த மாணவர்கள் கூச்சலிட பள்ளி வேனை டிரைவர் சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர் அந்த வேனின் அவசரகால வழி கதவை சரி செய்து கொண்டு அந்த வேன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றது. இதுபோல பள்ளி வாகனங்களை சரிவர பராமரிக்காமல் மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்