தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விழுப்புரத்தில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

நவராத்திரி விழாவில் முப்பெரும் தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் 10-ம் நாளான விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்தவொரு செயலும் வெற்றி பெறும் என்பது மக்களின் ஐதீகமாக கருதப்படுகிறது.

இதற்காக விஜயதசமியன்று பெற்றோர், தங்களது குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச்சென்று அங்கு சாமி சன்னதியில் நடைபெறும் 'வித்யாரம்பம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பார்கள். அப்போது சன்னதியில் வைக்கப்பட்டிருக்கும் நெல்மணிகள் மீது குழந்தைகளின் கையை பிடித்து தமிழின் முதல் எழுத்தான 'அ' என்று எழுத வைப்பார்கள். அதுபோல் குழந்தைகளின் நாவில் தங்க எழுத்தாணியால் எழுதி இசை, பாடல் போன்றவற்றை கற்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைப்பார்கள்.

முதல் கல்வி தொடக்கம்

அந்த வகையில் விஜயதசமியான நேற்று விழுப்புரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் குழந்தைகளுக்கு முதல்முறையாக கல்வியை தொடங்கும் வகையில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள ஹயக்கிரீவர் சன்னதியிலும் மற்றும் விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவில் வளாகத்தில் உள்ள ஹயக்கிரீவர் சன்னதியிலும் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தங்கள் குழந்தையின் கையை பிடித்து நெல்மணியில் 'அ' எழுத்து எழுதியும், குழந்தைகளின் பெயர் எழுதியும், முதல் கல்வியை தொடங்கி வைத்தனர். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்