தமிழக செய்திகள்

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது? அமைச்சர் பதில்

12ம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது என்பது பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது. எனினும், கல்லூரியில் சேருவதற்கு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவை என்பதால் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை சிறப்பு குழு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாகவும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்