தமிழக செய்திகள்

தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ஈபிஎஸ்சை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்