தமிழக செய்திகள்

பெண் தீக்குளித்து தற்கொலை

நோயால் பாதிக்கப்பட்டதால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவட்டார்:

நோயால் பாதிக்கப்பட்டதால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டார் அருகே உள்ள செறுகோல் நான்காம்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது59). கொத்தனார். இவருடைய மனைவி செல்வி (56). அரசின் 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

செல்வி ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு குட்டக்குழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக நோயின் கொடுமயால் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் செல்வி அருகில் உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியினர் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். மோப்பநாய் குக்கி வரவழைக்கபட்டு சாதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செல்வி நோயால் மனமுடைந்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்