தமிழக செய்திகள்

நகை திருடிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

நகை திருடிய வாலிபருக்கு வேலூர் கோர்ட்டில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வேலூரை அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 56). இவர் அந்தப்பகுதியில் உள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஷூ கம்பெனி நடத்தினார். மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அனில்குமார் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி குடியாத்தம் ஜே.ஜே.நகரை சேர்ந்த யுவராஜ் (33) என்பவரை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இதுதொடர்பான விசாரணை வேலூர் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் (எண்-4) நடைபெற்று வந்தது. மாஜிஸ்திரேட் ரோஸ்கலா வழக்கை விசாரித்து யுவராஜிக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஒருமாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து யுவராஜ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்