தலைப்புச் செய்திகள்

Budget 2026 Live Updates... மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக நிதி மந்திரி கூறினார்.

தினத்தந்தி

காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை வழங்கப்படும்

தென்னை விவசாயம்

தென்னை விவசாயத்தில் போட்டித்தன்மையை அதிகரிக்க தென்னை மேம்பாட்டு திட்டம் கொண்டுவரப்படும். கேரளா உள்ளிட்ட முக்கிய தென்னை வளர்ப்பு மாநிலங்களில் புதிய தென்னங்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

வருமான வரி சட்டம்: நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு

* ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது.

* திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிலிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.

* வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்

* வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது.

* மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து வரி குறைப்பு

மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

* மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும்.

* மாநிலங்களுக்கான நிதிப்பகிர்விற்கு ரூ.1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும்.

மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்

தமிழ்நாட்டின் பொதுகைமலை, இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்முவில் மலையேற்ற சுற்றுலாவை (டிரக்கிங்க்) ஊக்குவிக்க திட்டம் அமல்படுத்தப்படும்

மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

* செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும். செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

* பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

* அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய வழித்தட திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளாவுக்கு அறிமுகம்.

* விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

* நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.

* காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

* மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.

* பயோ பார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

* சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

*சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டிபோட புதிய திட்டங்கள்

* ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க, தொழிற்துறை, கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு

* இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்

* புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்

மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

* முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

* புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு

* மும்பை - பூனே, ஐதராபாத் - சென்னை, புனே - ஐதராபாத் இடையே அதிவிரைவு ரெயில் தடங்கள் உருவாக்கப்படும்

* கோயில் நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

* பொதிகை மலையில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

* உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்படும்

* 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்

* வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்

* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்

* இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10 சதவீதம் ஆக உள்ள முதலீடு வரம்பு, 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது

மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்

* தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

* பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்

* பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் டிரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்

ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும்

சென்னைக்க்கு அதிவேக ரெயில் வழித்தடம்

சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் இடையே அதிவேக ரெயி வழித்தடம் அமைக்கப்படும்

எலக்ட்ரானிக் துறை

எலக்ட்ரானிக் துறையை ஊக்குவிக்க ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

ரூ. 5 ஆயிரம் கோடியில் பொருளாதார மண்டலங்கள்

நாடு முழுவதும் ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டில் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்

மூலதன செலவு

2026-27ம் நிதியாண்டுக்கான மூலதன செலவு ரூ. 12.20 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

கண்டெய்னர்கள் உற்பத்தி

கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

நாடு முழுவதும் மகளிர் விடுதிகள்

நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவடத்திலும் பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்படும்.

தாது வழித்தடம்

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்

காந்தி பெயரில் புதிய திட்டம்:

காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்

கெமிக்கல் பூங்கா

மாநிலங்கலுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்

செமி கண்டக்டர்: ரூ. 40 ஆயிரம் கோடி

செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

 

சிறு , குறு தொழில்கள்

சிறு, குறு தொழில்களுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

உயிரி மருத்துவம்

உயிரி மருத்துவத்துறைக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் : நிர்மலா சீதாராமன் உரை: தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு போனஸ் 

தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு அரிய (மண் தாதுக்கள்) கனிம வழித்தடத்தை கட்டமைக்க மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் (போனஸ்) என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்: பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடி, சொல்லாட்சியை விட சீர்திருத்தத்தையும் தேர்ந்தெடுத்துள்ளதாகாவும், ஆத்மநிர்பர்தம் இந்தியாவின் நட்சத்திரம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் 

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் தாக்கல்: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் தற்போது 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றமத்திற்கு வருகை தந்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே நிர்மலா சீதாராமனுக்கு, திரவுபதி முர்மு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவை சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆசிபெற்றதுடன், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து அவரிடம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் உரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்

2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் உரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் புறப்பட்டார்.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

டெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட உள்ளது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தொழில் வளர்ச்சி, முதலீட்டு, வர்த்தகம், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் விலக்கு, ஜிஎஸ்டி, வளர்ச்சி திட்டங்கள், ரெயில்வே திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன் - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2026: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள் என்னென்ன..?

“வெற்றி மேல் வெற்றி சேர..” - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவதில் பின்னடைவு

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரெயிலின் நேரம் மாற்றம்

கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை