உலக செய்திகள்

சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

டமாஸ்கஸ்,

சிரியா தலைநகர் டமாஸ்கசில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

நேற்று முன்தினம் சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்து அளித்ததாகவும், அதன் பின்னரே சிரியாவில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைப் பிரிவு தெரிவித்தது.

அதே சமயம், இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் ஒன்றை தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவு முறியடித்ததாக சிரியாவின் அரசு ஊடகமான சனா தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேல் நடத்திய மற்றொரு ஏவுகணை தாக்குதலில் சிரிய வீரர்கள் 2 பேர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் ரஷியாவின் தேசிய பாதுகாப்பு மேலாண்மை மையம் தெரிவித்தது.

மேலும் இந்த தாக்குதலில் டமாஸ்கசில் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்