உலக செய்திகள்

சீனாவில் புதிய வகை ஒமைக்ரான் தொற்று! அதிவேகமாக பரவும் திறன் கொண்ட வைரஸ் பரவுவதாக தகவல்!

மிக வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரசின் 2 புதிய வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தினத்தந்தி

பீஜிங்,

உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலைகள், பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்திருக்கும் நிலையில், மிக வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரசின் மாறுபாடு அடைந்த 2 புதிய வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

புதிதாக பரவிவரும் ஒமைக்ரான் வைரசின் 'பிஎப்.7 மற்றும் பிஏ.5.1.7' வகை மாறுபாடுகள் அதி வேகமாக பரவும் தன்மை கொண்டவை. அவை சீனாவின் பல மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

சீனாவின் ஷாவோகுவான் மற்றும் யாண்டாய் நகரங்களில் பிஎப்.7 வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தின் ஷாகுவான் நகரில் பிஏ.5.1.7 கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவ வல்லுனர்கள் கூறுவது என்ன?

'பிஎப்.7 மற்றும் பிஏ.5.1.7' வகை மாறுபாடுகள் மிகவும் எளிதாக தொற்றும் தன்மை கொண்டவை. முந்தைய நோய் எதிர்ப்பு சக்தியை எளிதில் உடைத்துக்கொண்டு பரவும் வீரியமிக்கவை. இதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட பிஎப்.7 வகை மாறுபாடு மக்களைப் பாதிக்கலாம்.

அதே வேளையில், கொரோனா தடுப்பூசிகள், கடுமையான நோய் பாதிப்பு ஏற்படாமலும் மற்றும் வைரஸால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலகம் முழுவதும் பிஎப்.7 வகை மாறுபாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை மாறுபாடு பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவி வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்