உலக செய்திகள்

அமெரிக்கா ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இறுதி போட்டியாளர்கள் 11 பேரில் 9 பேர் இந்திய வம்சாவளியினர்

அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

தினத்தந்தி

பல்வேறு கட்ட சுற்றுகளுக்கு பிறகு இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளில் கடினமான ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிப்பவர்களுக்கு சாம்பியன்' பட்டமும், பரிசுத்தொகையும் வழங்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெல்லிங் பீ போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ போட்டி கடந்த மாதம் தொடங்கியது. பல்வேறு கட்ட சுற்றுகள் காணொலி காட்சி வாயிலாக நடந்து முடிந்த நிலையில் இறுதிகட்ட சுற்று வருகி 8-ந்தேதி நேரடியாக நடைபெற உள்ளது.இந்த நிலையில் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 போட்டியாளர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே இந்திய வம்சாவளியினர் உள்ள நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் இறுதிப்போட்டிக்கு அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் தற்போது தேர்வாகியுள்ளனர். ஸ்பெல்லிங் பீ போட்டியில் தற்போது வரை 26 இந்திய வம்சாவளியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்