ஜலலாபாத்,
பாதுகாப்பு படையினர், தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் திரண்டு நின்று கொண்டு ரம்ஜான் போர்நிறுத்தத்தை கொண்டாடினார்கள்.
அப்போது அந்த கூட்டத்தில் காரில் வந்த தற்கொலை படையினர் திடீரென குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் உடல் சிதறி 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 16 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என தலீபான்கள் அறிவித்து உள்ளனர்.