உலக செய்திகள்

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல்; ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் மஷ்ராப் பின் மோர்டாசா வெற்றி

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் கேப்டன் மஷ்ராப் பின் மோர்டாசா வெற்றி பெற்றுள்ளார்.

தினத்தந்தி

டாக்கா,

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று நடந்து முடிந்தது. அங்கு ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் 17 பேர் பலியாகினர்.

இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமரான கலீதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய 2 பெரும் கட்சிகள் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கூறப்பட்டது.

எனினும், ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கூட்டணி, அரசு அமைப்பதற்கு தேவையான 151க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என சேனல் 24 என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் நள்ளிரவு தகவலின்படி அவாமி லீக் கூட்டணியானது 191 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. இதனால் ஷேக் ஹசீனா தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்திடுவார் என கூறப்படுகிறது.

இந்த தேர்தலில், அவாமி லீக் கட்சி சார்பில் அந்நாட்டின் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் கேப்டன் மஷ்ராப் பின் மோர்டாசா போட்டியிட்டார். அவர் போட்டியிட்ட நரைல் 2 தொகுதியில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 418 ஓட்டுகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 8 ஆயிரத்து 6 ஓட்டுகளையே பெற்றுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்