உலக செய்திகள்

அமெரிக்காவில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது. அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பொன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளி யேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் புரளி என தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பங்களால் புல்லர்டன் பகுதி பரபரப்பாக காணப் பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்