உலக செய்திகள்

கனடாவில் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தினத்தந்தி

ஒட்டவா,

கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இது உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே மிக நீண்ட கடல்பாதையை கொண்ட கனடா மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இதுபற்றி பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ 2021-ம் ஆண்டு முதல் கனடாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கனடாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன என கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்