ஜோகன்னஸ்பர்க்,
ஆப்பிரிக்க கண்டத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆப்பிரிக்க கண்டத்தில் 33 லட்சம் பேர் பலியாவார்கள் என்று ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்தால் கூட 3 லட்சம் பேர் பலியாவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.