கராச்சி,
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பெரும்பாலான இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சாக்ரோ என்ற நகரில் உள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவிலை ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் சேதப்படுத்தினர். இதையறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் அமைதிகாக்க வேண்டும் என்று சிந்து மாகாண அரசு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.