உலக செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவா மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மினிலாரியில் பஞ்சாப் மாகாணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மலைப்பகுதி நடுவே அமைக்கப்பட்டிருந்த சாலையில் அந்த மினிலாரி வேகமாக சென்றது. குஷப் அருகே பென்ஞ்பீர் மலை கிராமத்தையொட்டி அந்த மினிலாரி சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை அது திடீரென இழந்தது.

இதனால் நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் பாய்ந்து உருண்டு கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்