ஜெனீவா,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று, உலக அளவிலான கெரேனா பாதிப்பு ஒரு லட்சத்து 83 ஆயிரமாக பதிவானது.
இது குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கெரேனா தெடர்பான உயிரிழப்புகளை தடுக்க டெக்சாமெத்தாசேன், மருந்தினை அதிகளவில் தயாரித்து விநியேகித்திட வேண்டும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவில் கெரேனா பாதிப்புகள், அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டு கெண்டுள்ளது.