உலக செய்திகள்

ஜப்பானில் சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலில் ராணுவ மந்திரி வழிபாடு

ஜப்பானில் 1867-ல் நடந்த போஷின் போர் முதல் 2-ம் உலகப்போர் வரை, போர்களில் இறந்த சுமார் 25 லட்சம் ஜப்பானியர்களின் நினைவாக தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி என்கிற கோவில் உள்ளது.

தினத்தந்தி

இந்த கோவில் கட்டப்பட்ட காலத்திலிருந்தே சீனாவும், இரு கொரிய நாடுகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரின்போது தங்கள் நாட்டு மக்களை கொன்று குவித்தவர்களை தியாகிகளாக ஜப்பான் கருதுவதாகவும், தங்கள் மீதான அடக்குமுறையின் நினைவுச்சின்னமாக யாசுகுனி கோவிலை கருதுவதாகவும் சீனா மற்றும் கொரிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இந்த கோவிலுக்கு ஜப்பானின் அரசியல் தலைவர்கள் செல்வதை அந்த நாடுகள் வன்மையாக கண்டித்து வருகின்றன.

இந்த நிலையில் ஜப்பான் ராணுவ மந்திரி நோபுவோ கிஷி நேற்று யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். 2016-ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் ராணுவ மந்திரி ஒருவர் இந்த கோவிலுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

வழிபாட்டுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் போரில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு நாட்டிலும் இயற்கையானது. நான் எனது மரியாதையை வெளிப்படுத்தினேன். நாட்டிற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன் என கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்