லண்டன்
முக்கிய ஐந்து அமைச்சர்களின் இலாகாக்களும் அமைச்சர்களும் மாற்றப்படவில்லை. தனது துணைப் பிரதமராக டேமியன் க்ரீனை நியமித்துள்ளார். க்ரீனும் தெரசாவும் கல்லூரி நாட்களிலிருந்து நண்பர்கள். இரண்டாவது மூத்த அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்மணியான ப்ரீதி படேல் இருப்பார். ப்ரீதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் திட்டத்திற்கான பேச்சு வார்த்தைகளில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் துவங்கும் என்று அறிவித்தார் மே. கன்சர்வேடிவ் கட்சிக்குள் தன் மீது அதிகரித்துள்ள அதிருப்தியை கட்டுக்குள் வைக்க முடிந்த அளவிற்கு முயன்றுள்ளார் என்றும், அதையே புதிய அமைச்சரவை எடுத்துக்காட்டுவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.