நியூயார்க்,
அமெரிக்காவின் மேற்கில் இருந்து கிழக்கு பகுதி வரை உள்ள கலிபோர்னியா, அரிசோனா, டெக்சாஸ், சோனோரா, உள்ளிட்ட மாகாணங்கள் மெக்சிகோ எல்லை பகுதியொட்டி உள்ளது. மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுக்கவும், போதை மருந்து கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு படையை நிறுத்தும் திட்டத்திற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க உள்துறை மந்திரி கிறிஸ்டிஜன் நீல்சன், மெக்சிகோ எல்லையொட்டி பகுதியில் உள்ள மாகாண கவர்னர்களுக்கு பிறப்பித்த உத்தரவில்,
சட்டவிரோத ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்புபடையினரை குவிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதனைதொடர்ந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படையினருக்கு தேவையான ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.