உலக செய்திகள்

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் மீது காலணி வீச்சு

பாகிஸ்தானில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் மீது காலணி வீசப்பட்டது. #ImranKhan

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் குஜராத் நகரில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பேரணி ஒன்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் கலந்து கொண்டார். வாகனம் ஒன்றில் இருந்தபடி கூட்டத்தினர் முன் பேசியபொழுது காலணி ஒன்று அவர் மீது வீசப்பட்டது.

ஆனால் அது அவர் மீது படாமல் மற்றொரு தலைவரான ஆலீம் கான் நெஞ்சு மீது பட்டது. கடந்த வாரத்தில் இதுபோன்ற தாக்குதல் நடப்பது 3வது முறை. கடந்த 11ந்தேதி லாஹூரில் ஜமியா நயீமியா பகுதியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி ஒன்று வீசப்பட்டது.

இதேபோன்று கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குவாஜா ஆசிப்பின் முகம் மீது கருப்பு மை ஊற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்