உலக செய்திகள்

பனாமாவில் நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி

பனாமா நாட்டில் நைட் கிளப்பில் 2 கும்பல்களுக்கு இடையேயான துப்பாக்கி சூட்டில் இன்று 5 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

பனாமா சிட்டி,

பனாமா நாட்டில் எஸ்பேசியோ பனாமா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த நைட் கிளப் ஒன்றில் இரண்டு கும்பல்களுக்கு இடையே திடீரென இன்று காலை மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இந்த மோதல் வெடித்து ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடந்துள்ளது. குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கும்பல்களை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு கார் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்