உலக செய்திகள்

வெள்ளை மாளிகை ஊடக செயலர் பதவியிலிருந்து ஸ்பைசர் விலகல்

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் பதவியிலிருந்து ஸீன் ஸ்பைசர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்

அதிபர் டிரம்ப் பிரபல முதலீட்டாளர் அந்தோணி ஸ்காராமுசி என்பவரை தகவல் தொடர்பு இயக்குநராக நியமித்ததை எதிர்த்து ஸ்பைசர் பதவியை விட்டு விலகியதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்பைசர் நேரடியாக அதிபர் டிரம்பிடம் ஸ்காராமுசியின் நியமனம் சரியல்ல என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்று அதிபர் ஸ்பைசரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு கேட்டதாகவும், ஆனால் ஸ்பைசர் அவரிடம் இந்த நியமனம் பெரிய தவறு என்றும், நேரடியாக பங்குச் சந்தையை பற்றி தெரிந்த ஒருவரை நியமிப்பது சரியல்ல என்று கூறியதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது.

சென்ற மே மாதம் அப்போதைய இயக்குநர் மைக் டுப்கே பதவி விலகியதை அடுத்து ஸ்பைசர் இடைக்கால ஏற்பாடாக ஊடக இயக்குநர் பதவியையும் சேர்த்து வகித்து வந்தார்.

வெள்ளை மாளிகை ஊடக செயலராக நியமிக்கப்பட்ட பிறகு ஸ்பைசர் மிகுந்த பிரபலமான பெயராக அமெரிக்க மக்களிடையே விளங்கி வந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்