உலக செய்திகள்

இலங்கை: கனமழையில் சிக்கி 21 பேர் பலி

இலங்கையில் பெய்த கனமழைக்கு 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SriLanka

தினத்தந்தி

இலங்கை,

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான மழை பெய்துவருகிறது. இதனால் இலங்கையின் கொழும்பு, பொலநறுவை, புத்தளம், மொனறாகலா, காலி, களுத்துறை கேகாலை, இரத்தினபுரி, அனுராதபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் மண் சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 100 வீடுகள் முழுமையாகவும், 400 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மாகாண நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்