உலக செய்திகள்

தெரு விளக்கு கல்வி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியில், இன்றளவும் மின்சாரம் கிடையாது.

அந்நாட்டின் வறுமை காரணமாக முறையான மின்விநியோகம் நடைபெறுவதில்லை. அதனால் இரவில் பெரும்பாலான பகுதிகள் இருள் சூழ்ந்தே காட்சியளிக்கின்றன.

இருப்பினும் கினி நாட்டு குழந்தைகள், இரவு நேரங்களில் உற்சாகமாக வீட்டுப் பாடம் படிக்கிறார்கள். எப்படி தெரியுமா..?

விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் தெரு விளக்குகள் இரவு முழுக்க பிரகாசிக்கும் என்பதால், அதன் அடியில் அமர்ந்து படிக்கிறார்கள். இதற்காக சில மைல் தூரம் நடக்கவும் செய்கிறார்கள்.

SCROLL FOR NEXT