புதுச்சேரி

மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் விரைவில் இயக்கப்படும்

மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் விரைவில் இயக்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா உறுதிளித்தார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏக்கள் நாஜிம், நாக.தியாகராஜன், பெற்றோர் சங்கத் தலைவர் சோழசிங்கராயர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், விரைவில் மாணவர்கள் பயணம் செய்வதற்கான ஒரு ரூபாய் கட்டண பஸ் விரைவில் இயக்கப்படும் என்றார். தொடர்ந்து சிறப்பாக கல்வி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பெற்றோர் சங்கம் சார்பாக விருது வழங்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல்: ‘இலவசம்’ வாக்குறுதிகளுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி இன்று வரும் நிலையில் சீக்கிய அமைப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று பட்ஜெட் தாக்கல்: மாநில அரசுகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றன - காங்கிரஸ்

ஐ.ஜி. அந்தஸ்து பெற 2 ஆண்டுகள் மத்திய பணி கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு

வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களுக்கு மம்தா அரசு அடைக்கலம் அளிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு