ஆன்மிகம்

மாசி திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர் கோவில்

மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக மாசி திருவிழா நடைபெறும் நிலையில், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வருகின்றனர். அவர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

அத்துடன், விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்