ராமர் கோவில் ஸ்பெஷல்

கும்பாபிஷேக விழா: சூரத்தில் ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சூரத்,

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாநில அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், ராமர் பெயருடன் கூடிய தொப்பிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. சுமார் 2 லட்சம் வரையிலான தொப்பிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ஜவுளி தொழிலதிபர் சஞ்சய்பாய் கூறுகையில்;

"ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் 11.5 அங்குல நீளமும் 3.5 அங்குல அகலமும் கொண்டதாகும். தொப்பிகள் இறைவனின் உருவம் மற்றும் ராம நாமத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சூரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொப்பிகளின் பயன்பாடு அதிக அளவில் இருக்கும் என்பதால் அதிக அளவில் தொப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொப்பிகள் தயாரித்து, நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்