நாடாளுமன்ற தேர்தல்-2024

'ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரம்' - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற ரீதியில் மொத்தம் 48 குழுக்கள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்