கிரிக்கெட்

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு ஐ.பி.எல். நிர்வாகம் அறிவிப்பு

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்தது.

தினத்தந்தி

மும்பை,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்குரிய பரிசுத்தொகை விவரத்தை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்படி இந்த ஆண்டில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு ரூ.20 கோடி பரிசாக வழங்கப்படும். கடந்த சீசனை விட இது ரூ.5 கோடி அதிகமாகும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.12 கோடி கிடைக்கும்.

மதிப்புமிக்க வீரர், தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர், தொடரில் அதிக விக்கெட்டுகள் சாய்க்கும் பவுலர், வளர்ந்து வரும் நட்சத்திர வீரர், நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர், சிறந்த கேட்ச் செய்யும் வீரர் ஆகியோர் தலா ரூ.10 லட்சத்தை பரிசாக பெறுவார்கள். தொடரின் இறுதியில் குறிப்பிட்ட தகுதியுடன் அதிக பேட்டிங் ஸ்டிரைக்ரேட் வைத்திருக்கும் வீரருக்கு கார் பரிசாக அளிக்கப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்