image courtesy: AFP 
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

அகீம் ஜோர்டன் அறிமுக வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தினத்தந்தி

டிரினிடாட்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2-வது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளரான ஜெர்மியா லூயிசுக்கு பதிலாக அகீம் ஜோர்டன் அறிமுக வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:-

கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், மைக்கைல் லூயிஸ், சச்சரி மெக்கஸ்கி, கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெவின் சின்க்ளேர்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்